தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனை நியமிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கியுள்ளார். செங்கோட்டையனுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, அவர் புதிய எம்.எல்.ஏ-க்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மேலும், அவர் பேரவை முன்னவராகவும் செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.