கவுண்டமணி மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடலுக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் இன்று (மே. 05) காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், "ஜனநாயகன்" படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய விஜய், தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்திற்கு சென்று அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி