தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக டிவி சேனலுக்கு பேட்டி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்தியாளர்களை விஜய் சந்திப்பதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில், முற்றிலும் மாறுபட்ட, பொழுதுபோக்கை மையப்படுத்திய டிவி நிகழ்ச்சியொன்றில் விஜய் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் அரசியல், சினிமா மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து விஜய் ஜாலியாக பேச இருக்கிறாராம். பிரபல பொழுதுபோக்கு சேனலில் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.