தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவின், இறுதி நாள் நிகழ்ச்சி இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. அப்போது பேசிய மாணவி, “2 கிராம் தங்கத்துக்காக நாங்க இங்க வரோம்னு பிற்போக்குத் தனமாக சிலர் பேசுகிறார்கள். விஜய்க்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு தாய் மாமா போன்றது. தாயிற்கே இல்லாத உரிமை தாய் மாமாவுக்கு இருக்கு. இது பற்றியெல்லாம் சில தற்குறிகளுக்கு புரியாது” என கூறியுள்ளார். தவாக வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக மாணவி பேசியதாக கூறப்படுகிறது.
நன்றி: பாலிமர்