தவெக தலைவர் விஜய் ஒரு வயதான நடிகர் என கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (நவ.6) சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “கரூர் சம்பவத்தில் முதன் முதலாக விஜய்யைக் கைது செய்ய வேண்டும். வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரை சிறையில் அடைக்க வேண்டும். முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதே தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தான்” என்றார்.