சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.13) நடைபெற்றது. அதில் உறையற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடியுள்ளார். கொள்கையை பெயரளவில் மட்டும் வைத்துக்கொண்டு யாரிடமும் சரணடையும் வழக்கம் தனக்கு இல்லை என்றும், அதிமுக தலைமை தற்போது அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பாதையை மறந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நன்றி:News18