வேலூர் அகரம்சேரியில் வரும் 23ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தவெக தொண்டர்களுக்கு சில முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, “பொதுமக்கள் வரும் இடங்களில் தண்ணீர் உள்ளதா, சரியாக காற்று வசதி உள்ளதா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும். எந்த உயிரும் போய்விடக்கூடாது. எங்களுக்கும் கூட்டம் வரும், அதனை நாங்கள் கையாண்டுவருகிறோம்” என்றார்.
நன்றி: தந்தி