தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக பரிசுகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று (ஜூன் 15) இறுதிக்கட்டமாக 39 சட்டமன்ற தொகுதி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறார். இதில், சேலத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு, ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். ஜேஇஇ தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவி, ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ளார்.
நன்றி: தந்தி