திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் முனைவர் சந்தீப் ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட 15 பேருக்குக் கட்சிப் பதவிகளை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப் ஆனந்திற்கு இப்பதவி வழங்கப்பட்டதன் மூலம், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தவெகவின் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.