விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘பாக்கெட் நாவல்’ படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்ற அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வீட்டை விட்டு நீண்ட காலம் பிரிந்திருந்தது தன்னை பாதித்ததாகவும், தனிமையுடன் போராடியதாகவும் கூறியுள்ளார். மும்பை திரும்பியதும் படகு சவாரி சென்று மன அமைதி பெற்றதாகவும், இந்த அனுபவம் மும்பை மீது மேலும் காதல் கொள்ள வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.