பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு நேற்று (மே 6) தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லம் அருகே பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வருகை தந்தபோது அங்கு காத்திருந்த தவெகவினர் விசிலடித்து கூச்சலிட்டனர். தவெக இன்னும் ஆட்சியமைக்காத சூழலில், தவெகவினர் செய்யும் செயல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: சன் செய்திகள்