விஜய்யை முதல்வர் ஆக்காமல் ஓயமாட்டேன் என செங்கோட்டையன் கூறியதற்கு, 'விஜய் ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆகலாம்' என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார். இன்று (பிப்.9) பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், 'எல்லாரும் தன்னை எம்.ஜி.ஆர் என கூறிக்கொள்ளலாம். ஆனால், மக்கள் ஏற்கமாட்டார்கள். தேர்தலுக்குப் பின் தவெக என்ன ஆகப்போகிறது என்பது இப்போதே தெரிகிறது' என விமர்சனம் செய்துள்ளார்.