சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று ஆஜர்: தனி விமானத்தில் டெல்லி பயணம்

கரூரில் கடந்த செப்., 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்டமாக, விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு இன்று (ஜன., 12) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக விஜய் இன்று காலை டெல்லி செல்கிறார். மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி