வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி 143 பேருடன் சென்ற வியட் ஜெட் விமானத்தில் நடுவானில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது ஒரு எந்திரம் செயலிழந்ததால், விமானிகள் சென்னையில் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினர். இதையடுத்து இரவு 10.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தை சரிசெய்ய பொறியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.