கேரளா: கொச்சி அருகே முலந்துருத்தி பேரும்பிள்ளி பகுதியை சேர்ந்த ராஜு என்பவர், நேற்று (ஜூலை 30) அதிகாலை சோட்டானிக்கரை பாலைஸ் ஸ்கொயரில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். அதிகாலை என்பதால் சுமார் 20 நிமிடங்கள் ஜிம்மிற்கு யாரும் வரவில்லை. அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜுவை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.