ஹரியானா: பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்த விகல் சிங் (30), ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர் தனது சக ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, விகல் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.