மத்தியப் பிரதேசம்: சியோனி மாவட்டத்தில் உள்ள பழங்குடி விடுதியில், ஒரு ஆசிரியை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துள்ளார். அப்போது, அங்கிருந்த குழந்தைகளை அழைத்து, தனது கால்களுக்கு மசாஜ் செய்ய கூறியுள்ளார். இது குறித்து அந்த குழந்தைகள் பெற்றோர்களிடம் கூறினர். அதனையடுத்து, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.