தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று (ஜூன் 15) சீமான், பனைமரம் ஏறி கள் இறக்கினார். சீமான், பாதுகாப்பாக மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணிபோல் கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மரத்தில் ஏறி கள் எடுத்து கீழே வந்த சீமான், அதனை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த கள் இறக்கும் போராட்டத்தில் சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
நன்றி: tnmediatamil