VIDEO: ரீல்ஸ் மோகம்.. மகளின் கண்முன் நீரில் இழுத்து செல்லப்பட்ட தாய்

முத்திப்போன ரீல்ஸ் மோகம் காரணமாக மகள் கண்முன்னே தாய் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சோகம் நடந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியைச் சேர்ந்த விசேஷிடி(35 வயது) சம்பவத்தன்று தனது மகளுடன் கங்கை நதிக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் நதியில் குளித்தபோது ரீல்ஸ் எடுப்பதற்காக ஆழமான பகுதியில் கால் வைத்தபோது நதிநீரில் அடித்துச் செல்லப்பட்டார். அம்மா, அம்மா என மகள் அபயக்குரலிட்டும் பலனில்லை. தற்போது பெண்ணை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி