பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிவில், "பெரம்பலூர் கொளத்தூர் சுந்தரமூர்த்தி அய்யனார் கோயிலில் இருந்து உண்டியலை திமுக நிர்வாகி துணைவேந்தன் தூக்கிய வீடியோ தான் இது. உண்டியலை துணைவேந்தன் தான் வைத்துள்ளார். அதிகாரிகள் அதை சீல் வைக்க நடவடிக்கை எடுத்தபோது, அவர் மிரட்டல் விடுத்து உண்டியையும் பக்தர்களின் காணிக்கைகளையும் எடுத்துச் சென்றார். திமுக ஆட்சியின் கீழ், கோயில்கள் கூட அரசியல் கொள்ளையிலிருந்து தப்பவில்லை" என்றார்.