காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர்கள் 38 பேர் கொல்லப்பட்டனர். மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ஆம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்நிலையில், தற்போது காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பொதுமக்கள் அலறியடித்து ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது.
நன்றி: bbctamil