தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சேலம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பொழியும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்றி: வின்