சவுதி அரேபியாவில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்த விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. லக்னோ வந்த ஹஜ் பயணிகள் விமானத்தில் தீப்பற்றியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பற்றியதால் ஓடுதளத்தில் இறங்கியபோது தீப்பொறி பறந்ததையடுத்து விமானி பாதுகாப்பாக விமானத்தை கீழே இறக்கினார். 20 நிமிடங்களில் நிலைமை சீராகி விமானத்தில் இருந்த 250 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.