மகாராஷ்டிரா: நாக்பூரில் இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் வைத்து இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பைக்கில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவர் முதலில் இளம்பெண்ணின் முகத்தில் ஓங்கி குத்துகிறார். அதன்பின் அப்பெண்ணை அடித்து தரையில் தள்ளி விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவிய நிலையில், அந்த இளைஞரை கைது செய்ய வேண்டுமென நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.