10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு வஜீரிஸ்தானில், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான வெப்ப இமேஜிங் வீடியோவை பாகிஸ்தான் தாலிபான் வெளியிட்டுள்ளது. ஒருபுறம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில், உள்நாட்டு குழப்பத்தால் அந்நாடு விழி பிதுங்கி வருகிறது.