துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவை வருகை

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (செப்.21) கோவை வருகிறார். அவரை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். பின்னர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அவரது வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்று மாலை 5 மணி முதல் செப்.22 காலை 11 மணி வரை பல்வேறு பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕