இந்தி சினிமாவின் பிரியமான சின்னமான மூத்த நடிகை காமினி கௌஷல் (98) காலமானார். 1946 ஆம் ஆண்டு கேன்ஸ் விருது பெற்ற 'நீச்சா நகர்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஏராளமான படங்களில் மறக்கமுடியாத நடிப்புகளை வழங்கி, இந்திய சினிமாவில் அழியாத முத்திரையைப் பதித்தார். இவர், திலீப் குமார் மற்றும் ராஜ் கபூர் உள்ளிட்ட பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றினார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.