தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீது சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (நவ., 10) தீர்ப்பளிக்கிறது. முந்தைய திமுக ஆட்சியில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், அக்டோபர் 26-ல் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆதாரங்கள் இல்லை என அவரது தரப்பும், பணப்பரிமாற்றத்திற்கு வீடியோ ஆதாரம் உள்ளதாகக் கூறி ஜாமீனுக்கு அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நன்றி: Polimer