தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று (மே.13) தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இரு தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி நந்தினி தேவி இன்று தீர்ப்பு வழங்க உள்ளார். இதையொட்டி, கோவை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.