வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' படம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியீடு?

இயக்குநர் வெங்கட் பிரபு, ஏழு வருடங்களுக்கு முன்பு இயக்கிய 'பார்ட்டி' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெய், மிர்ச்சி சிவா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக வெளியீடு காணாமல் தாமதமாகி வந்தது. இந்நிலையில், இந்த படத்தை 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு தற்போது திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி