தமிழகத்தில் வரும் பிப்.23-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை 'வெல்லும் தமிழ்பெண்கள்' என்ற பெயரில் வீடு வீடாக சென்று பரப்புரை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உலக மகளிர் தினமான மார்ச் 8-க்குள் பெண்களின் முன்னேற்றத்திற்கான அரசின் திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. இந்த இரு வார கால பரப்புரையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.