வேலூர் அருகே பேருந்து மோதி வாலிபர் பலி

வேலுரை அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25), மேளம் அடிக்கும் தொழிலாளி. இவர் நேற்று இரவு 8. 30 மணியளவில் கருகம்புத்தூர் பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி வந்த தனியார் பஸ் விஜயகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று தனியார் பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதனால் டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார். விபத்து கார ணமாக அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு வந்து விஜயகுமார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி