வேலூரில் ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது

வேலூர் தொரப்பாடியை சேர்ந்தவர் கரணசந்த் (வயது 45). வியாபாரி. இவர் கடந்த மாதம் வேலூர் சாரதி மாளிகையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது ஸ்கூட்டர் காணாமல் போயிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து கரணசந்த் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்தார். அதில் காட்பாடி தாலுகா விருதம்பட்டை சேர்ந்த இளையகுமாரன் (25) ஸ்கூட்டரை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் இளையகுமாரனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி