வேலூர் கன்சால்பேட்டையை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் வேலூரை அடுத்த சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 27-ந் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் அதன் பின்னர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இளம்பெண்ணின் தோழிகள் மற்றும் உறவினர்கள் உள்பட பல்வேறு வீடுகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.