வேலூர்: ஆம்புலன்ஸில் மனு அளிக்க வந்த பெண்

ஆம்புலன்ஸில் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்ணால் பரபரப்பு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் வயது 60. இவர் குடியாத்தத்தில் உள்ள ஆதித்யா விஜயலட்சுமி என்ற தீப்பெட்டி தொழிற்சாலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பணியின் போது தீக்குச்சி மூட்டை விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்தப் படிக்கையாக இருந்து வருகிறார். இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் உதவி கேட்டு நடக்க முடியாத நிலையில் ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி