காட்பாடியில் பேசிய அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், பீஞ்சமந்தை மலை கிராமத்தில் கூட்டுறவு சங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அந்த கிராமத்தில் இன்னும் இடம் தேர்வு செய்யப்படாத நிலையில், அடிக்கல் நாட்டு விழா எப்படி நடத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். பல போராட்டங்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் கூட்டுறவு கடைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இடம் தேர்வு செய்யப்படாமல் அடிக்கல் நாட்ட முடியாது என்றும் அவர் கூறினார்.