வேலூர்: பூட்டை உடைத்துச் சென்று மாணவர்கள் போராட்டம்

வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணை முதல்வராக உள்ள அன்பழகன் மீது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

வழக்கு பதிவு செய்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லாததாலும், துணை முதல்வரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரியில் இருந்து வெளியேறி போராட்டம் நடத்தினர். 

கல்லூரியின் கேட் மூடப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து வெளியேறிய கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் வேலூரில் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்தி