அதன்படி அங்கு சுமார் 21 இடங்களில் சாலைகள் அமைக்க ரூ. 1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. இந்தநிலையில் சுண்ணாம்புக்கார தெருவில் நடைபெறும் சாலைப்பணிகளை கார்த்திகேயன் எம். எல். ஏ. ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை விரைந்து, தரமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மண்டல குழு தலைவர் நரேந்திரன், உதவி கமிஷனர் சதீஷ்குமார், இளநிலை பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.