வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மூர்த்தி (49). இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல்துறையில் நேற்று (மார்ச் 17) புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.