அகரம்சேரி பாலாற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

குடியாத்தம் ஒன்றியம் அகரம்சேரி ஊராட்சி பாலாற்றங்கரையில் மரக்கன்றுகளை நட்டு குறுங்காடாக மாற்றுவதற்கு சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்த் ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் அனுமதி பெற்று சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பாலாற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். 

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் உதவி இயக்குனர் திருமால், தாசில்தார் பழனி, குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.சி. சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகரம்சேரி ஊராட்சி தலைவர் வச்சலா ராஜ்குமார், துணைத்தலைவர் பிரபாகரன், சமூக ஆர்வலர் சேகர் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி