இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது கைப்பையில் ரூ. 2 ஆயிரம், மற்றும் செல்போன் இருந்ததாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் மாலாவின் கைப்பையை திருடிச்சென்றது சின்னஅல்லாபுரம் பகுதியை சேர்ந்த சித்திக் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.