இதற்கு வேலூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளர் பரசுராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரவுடி ராதாவின் மனைவி தீபிகாவின் குற்றச்சாட்டு குறித்து தொலைபேசி மூலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "ரவுடி ராதாவின் மனைவி கூறிய புகாரில் உண்மை தன்மையில்லை. எதற்காக இந்த மாதிரியான புகாரினை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. பணம் கேட்டு ஜெயிலர் மிரட்டுகிறார் என்பது நம்பக் கூடியதாக இல்லை. ஜெயிலருடன் எப்போதும் ஒரு அலுவலர் இருப்பார். சிறையில் விதிகளின்படி தான் அனைத்து கைதிகளும் நடத்தப்படுகிறார்கள். கொடுமைப்படுத்தப்படுவதாகவும், பணம் கேட்கப்படுவதாகவும் தீபிகா வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஏதேனும் ஆதாரம் இருப்பின், அந்த ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்" என்றார்.