வேலூரில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க கைரேகை பதிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கருவிழி அடையாளம் மூலம் சரிபார்த்து பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு நபரை அடையாளம் காண 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் ஆவதாக பொதுமக்களும் கடை ஊழியர்களும் கூறுகின்றனர். இதனால் சத்துவாச்சாரி தாட்கோ நகரில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்து நின்றனர். மேலும் அவர்கள் கடை ஊழியருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதேபோல் பல ரேஷன் கடைகளிலும் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் தாமதமாகும் நேரத்தில் கைரேகை பதிவு கருவியை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.