இந்நிலையில் மராட்டியபாளையம் பகுதியில் உள்ள விவசாயி கிணற்றில் பாலகிருஷ்ணனின் சடலத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலையை அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் 2 மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர்.
இதனை அடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.