வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஸ்ரீதரின் மகள் சங்கரி (19), நர்சிங் கல்லூரி மாணவி. கடந்த இரண்டு நாட்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சங்கரி, நேற்று (ஏப்ரல் 7) திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.