வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவிகள் விடுதிகளில் தங்கி கல்வி கற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.