அரியூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

அரியூர் அருகே கலங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் ஊசூர் குளத்துமேடு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதைப்பார்த்த மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்றனர். 

இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (29). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மர்மநபர்கள் அதை திருடிச்சென்றனர். இதுகுறித்து அவர் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி