வேலூர் பேருந்து நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு

வேலூர் கே. வி. குப்பம் பகுதி செஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பரத்குமார் (23) என்பவர், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கு கோவில் பகுதியில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, சாவியை எடுக்க மறந்துள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் மோட்டார் சைக்கிளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி