வேலூரில் சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதி பலி

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சுரேஷ் (57), தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது கன்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி