வேலூரில் உள்ள துப்பறியும் நாய் படை பிரிவு மையத்தில் மோப்பநாய் லூசியின் உடலுக்கு காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
2014 ஆம் ஆண்டில் தமிழக அளவில் நடைபெற்ற வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றதும், வி வி ஐ பி பாதுகாப்பு பணி வெடிகுண்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.